மதுரை, டிச. 7: சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 69வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை, அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக சார்பில் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ ஆகியோர் நிர்வாகிகளுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து மதிமுக சார்பாக மு.பூமிநாதன் எம்எல்ஏ தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விசிக சார்பில் பேரணியாக சென்று அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற பல்வேறு அமைப்புகளை சேர்ந்தோர் பேரணியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்


