அலங்காநல்லூர், செப். 7: அலங்காநல்லூர் அருகே ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் எலிஸ்ஜெனிபர். இவர் மதுரையிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். திருவனந்தபுரத்தில் சமீபத்தில் 17வது தென்னிந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் மாணவி எலிஸ் ஜெனிபர் வெற்றி பெற்று 4 வெண்கல பதக்கங்களை வென்றார். வெற்றி பெற்று பள்ளி மற்றும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவியை பயிற்சியாளர், பள்ளி முதல்வர், பள்ளி தாளாளர், ஆசிரிய- ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர்.

