Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உசிலம்பட்டி கஞ்சா வியாபாரி கைது

உசிலம்பட்டி, ஆக.7: 313 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் உசிலம்பட்டியில் பதுங்கியிருந்த பிரபல கஞ்சா வியாபாரியை ஆந்திர மாநில போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கன்னியம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால்(46). இவர் முறுக்கு தொழில் செய்வதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலத்திற்கு சென்றார். அங்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு தொழிலதிபராக வளர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் கிடைத்த பணத்தில் உசிலம்பட்டி மட்டுமல்லாது ஆந்திரா, ஒடிசா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் சொந்தமாக பங்களா கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயபால் 313 கிலோ கஞ்சா கடத்தியதாக ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் தகதத்தி காவல் நிலையத்தில் கடந்த 2ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். அவர் சொந்த ஊரான