Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நர்சுகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஆக. 7: காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை அரசு மருத்துவமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சக்திவேல், பொருளாளர் காளியம்மாள், மாநில துணை தலைவர் அமுதா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாளை வரை நோயாளிகளுக்கு எவ்வித இடையூறுமின்றி காலை 7 முதல் 8 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஆர்ப்பாட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய காலி பணியிடங்களை உருவாக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், நர்சுகளுக்கு கூடுதல் பணிகளை வழங்கி பணிப்பளுவை வழங்க கூடாது, தொகுப்பூதிய முறையை ரத்து செய்து காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன கோஷங்களை முழக்கமிட்டனர்.