மதுரை, செப். 5: வரும் செப் 7ம் தேதி மதுரை கோட்ட அளவிலான தபால்துறை குறைதீர் கூட்டம் நடக்கிறது. மதுரை கோட்ட தபால் துறை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளதாவது, ‘‘மதுரை கோட்ட அளவிலான தபால் துறை குறைதீர் கூட்டம் வரும் செப். 7ம் தேதி காலை 11 மணிக்கு தல்லாகுளம், முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. எனவே மக்கள், தபால்துறை சம்பந்தமான தங்களது குறைகளை, முழு முகவரியுடன் தபால் பதிவு செய்த அலுவலகம், நாள், அனுப்புநர்/பெறுநர், விலாசம் போன்ற தகவல்களுடன் இருக்க வேண்டும்.
மேலும் புகாரில், சேமிப்புத் திட்டங்கள்/ அஞ்சல் ஆயுள் காப்பீடு பற்றியதாக இருந்தால் புகாரில் கணக்கு எண் பாலிசி எண் மற்றும் வைப்புத்தொகையாளர் காப்பீட்டாளர் முழு முகவரி தபால் அலுவலத்தின் பெயர் இடம்பெற செய்தல் வேண்டும். இத்தகவல்களுடன் தபால் குறைதீர் கூட்டம், முதுநிலை அஞ்சல கண்காணிப்பாளர் அலுவலகம், மதுரை-625002., என்ற முகவரிக்கு புகார் மனுக்களை சாதாரண தபால்/ விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

