Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ஹஜ் பயணிகள் வசதிக்காக மதுரையில் இருந்து மதீனாவிற்கு நேரடி விமானம் வேண்டும்: இந்திய ஹஜ் சங்க தலைவர் கோரிக்கை

மதுரை, ஆக.4: இந்திய ஹஜ் சங்க தலைவர் அபூபக்கர் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு முறையும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் போது பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சென்னை வந்து தான் செல்லும் சூழல் உள்ளது. எனவே மதுரையில் இருந்து மதீனாவிற்கு நேரடியாக விமான சேவையை வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னை விமான நிலையத்தில் ஹஜ் பயணிகள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வரும் நிலையில், கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நிறைவடையும். மதுரை விமான நிலையத்திலும் ஹஜ் பயணிகள் தங்கும் விடுதி கட்டித்தர அரசு முன்வர வேண்டும். இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில், ஒன்றிய அமைச்சரவையில் இஸ்லாமியர் ஒருவருக்கு ஒன்றிய அரசு வாய்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார்.