Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சிறுதானியங்களில் மாவு பூச்சி பாதிப்பா?

மதுரை, ஆக. 3: சிறு தானியங்களை தாக்கும் மாவு பூச்சிகள் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறு தானியங்கள் பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. சிறு தானிய பயிர்களில் மாவுப்பூச்சி தென்பட்டால் இருக்க முதலில் விளைநிலங்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். கிரிப்டோளமஸ் பொறி வண்டுகளை ஏக்கருக்கு பயன்படுத்துதல் 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை ஒட்டும் திரவத்துடன் கலந்து பயன்படுத்த வேண்டும்.

ரசாயன மருந்துகளாக புரபனோபஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி இமிடா குளேபிரிட் 0.5 மில்லி தயோ மீத்தாக்சான் ஒரு கிராம் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். இந்த மருந்துகளை தெளிக்கும் போது ஒட்டும் திரவத்தை பயன்படுத்த வேண்டும். இதில் மருந்தை சுழற்சி முறையில் பயன்படுத்துவதே சிறந்த முறையாகும். இம்முறைகளை விவிசாயிகள் கடைபிடித்தால் சிறு தானியங்களில் மாவு பூச்சிகளின் தாக்கம் குறையும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.