மதுரை, அக்.2: மதுரையில் ஒரே இடத்தில் 25 வகையான நாட்டு மர இனங்களின் 700 மரக்கன்று கொண்டு மியாவாக்கி முறையில் மரக்காடு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இம்முயற்சி மேலும் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.மதுரை மாநகராட்சியின் மூலம் நகரை பசுமையாக்கும் வகையில் மரக்கன்றுகள் தனியார் தொண்டு நிறுவனங்களால் நடவு செய்யப்பட்டு வருகிறது. இதன்பேரில், நகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் மதுரை யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் வெள்ளக்கல்லில் உள்ள மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் நேற்று மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
25 வகையான நாட்டு மர இனங்களைச் சேர்ந்த மொத்தம் 700 மரக்கன்றுகள் இங்கு நடப்பட்டு வருகிறது. கமிஷனர் கௌரவ்குமார் கூறும்போது, ‘நகரின் பல்வேறு பகுதிகளில் பசுமைப் பரப்புகளை அதிகரிப்பது, நகர வெப்ப நிலையின் தாக்கத்தைக் குறைப்பது, சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பது மற்றும் எதிர்கால தலைமுறைக்காக நிலையான பசுமை சூழலை உருவாக்குவது ஆகியவை இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.


