Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சிகிச்சைகளை வெற்றிகரமாக்கும் ஹானா ஜோசப் மருத்துவமனை பல்லாயிரக்கணக்கானோர் பயன்

மதுரை, அக்.2: மதுரை சிந்தாமணி டோல்கேட் அருகே மதுரை- தூத்துக்கடி ரிங்ரோட்டில் இருக்கிறது ஹானா ஜோசப் மருத்துவமனை. நரம்பியல், இருதய, மூட்டு மற்றும் எலும்பியல், மன நல சிகிச்சைகளில் தனித்துவமிக்க இம்மருத்துவமனை குறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்.ஜே. அருண்குமார், துணை நிர்வாக இயக்குநர் டாக்டர் கவிதா பென் அருண்குமார் ஆகியோர் கூறியதாவது:‘‘ஹானா ஜோசப் மருத்துவமனையை, நரம்பியல் அறுவை சிகிச்சை, மனநல மருத்துவம் மற்றும் விபத்து காய சிகிச்சைக்கான சிறப்பு மையமாக 2008ல் துவக்கினோம்.

40 படுக்கை வசதிகள், 2 ஆபரசேன் தியேட்டர்கள் மற்றும் 17 ஐசியு படுக்கைகளுடன் துவக்கப்பட்டு, 2011ல் ஒரு கார்ப்பரேட் நிறுவனமாகி புதிய மருத்துவமனை கட்டுமானங்களுடன், கூடுதல் மருத்துவ வசதிகளால் மிளிர்கிறது. மிகச் சிக்கலான அறுவை சிகிச்சைகளை, பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு செய்த மருத்துவமனை எனும் பெயர் பெற்று, நரம்பியல் சிகிச்சையில் மதுரையின் அடையாளமாகி இருக்கிறது. நரம்பியல் கதிரியக்க பிரிவு துவக்கி, சர்வதேச தரத்தில் ஓர் நரம்பியல் சிகிச்சை மையமாக உள்ளது. கேத் லேப், இருதயவியல் ஆபரேசன் தியேட்டர்களுடன் இருதயவியல் சிகிச்சை மையம், மிகச் சிக்கலான, ‘இண்டர்வென்சனல் கொரனெரி ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஓபன் ஹார்ட் சர்ஜரி’ வசதிகளும் பெற்றுள்ளது.