Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி, அக்.2: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் கனரா வங்கி அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் நேற்று திடீரென பழுதானது. இதுகுறித்து வாலாந்தூர் துணை மின் நிலையத்தில் புகார் தெரிவித்ததால், செல்லம்பட்டியில் அருகிலுள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் அதிக அழுத்தம் காரணமாக அந்த டிரான்ஸ்பார்மரும் திடீரென பழுதானதால் மின்சாரம் தடைபட்டது.

இதனால் செல்லம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுரை- தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த வாலாந்தூர் போலீசார் மற்றும் துணை மின் நிலைய அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். விரைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால், சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.