Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் குற்றம் உறுதியானால் கடும் தண்டனைகள்: மாவட்ட நீதிபதி ேபச்சு

மதுரை, ஜூலை 2: மதுரை மருத்துவக் கல்லூரி மனநலத்துறை ஏற்பாட்டின் பேரில், மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினம்’ குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஸ்குமார் துவக்கி வைத்தார். இதில் மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.அல்லி பங்கேற்று பேசியதாவது: போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், அவர்களுக்கான ஆலோசனைகள் வழங்குவதிலும் மருத்துவர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

தைப்பொருள் மற்றும் மனநல பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் சட்டம் என்டிபிஎஸ் ஆக்ட்டின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வழங்கப்படும் தண்டனை மிகக் கடுமையானதாக இருக்கும். இவ்வகையில் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டால் அவர்கள் முழுமையான தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் மல்லிகா, கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நிலைய மருத்துவ அதிகாரிகள் சரவணன், முரளிதரன், மனநலத்துறை டாக்டர்கள் ஜான் சேவியர் சுகதேவ், கீதாஞ்சலி, அருண் வெங்கடேஷ், கிருபாகர கிருஷ்ணன் மற்றும் போலீஸ் டிஎஸ்பி சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.