Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதல்

திருப்பரங்குன்றம், ஜூலை 2: திருப்பரங்குன்றம் அருகே பசுமலை பகுதியில் திருமங்கலம் - மதுரை சாலையில் உள்ள மூலக்கரை பேருந்து நிறுத்தம் அருகே கல்லூரி மாணவர்கள் சிலர் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சுமார் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் கத்தி, இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். பின்னர் இரு தரப்பினர் இடையே கடும் தாக்குதல் நடைபெற்றது.

இதனால் அச்சமடைந்த அப்பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்கள் உள்ளிட்டோர் ஓட்டம் பிடித்தனர். இதன்படி கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் நடுரோட்டில் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏறடுத்தி வருகிறது. இந்த மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.