Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஷம் குடித்த தொழிலாளி சாவு

திருமங்கலம், ஜூன் 2: திருமங்கலம் அருகேயுள்ள கண்டுகுளம் கிராமமத்தில் உசிலம்பட்டி மெயின்ரோட்டில் இளநீர் கடை அருகே 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்து கிடந்தார். தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தவர் சாத்தஙகுடியை சேர்ந்த சூரியதேவர்(41) என்பதும், அவர் விஷம் குடித்து உயிரிழந்ததும் தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.