Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கூடுதல் கட்டிட பணிகள் ஆய்வு

மதுரை, ஆக. 1: திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.3.16 கோடி செலவில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் கௌரவ் குமார், இந்த கூடுதல் கட்டிடத்தில் செயல்பட உள்ள உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, பொதுமக்கள் காத்திருக்கும் அறை, கழிப்பறை, மருத்துவர்கள் அறை, ஆய்வகம், மருந்துகள் வழங்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடத்தின் பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நிர்ணயித்த காலத்திற்குள் காலதாமதமின்றி பணிகளை விரைந்து முடித்து. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அலுவலர்களை அறிவுறுத்தினார். உதவி கமிஷனர் குமரன், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் உடனிருந்தனர்.