Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்க்கரை நோயால் காலில் உருவாகும் பாதிப்புகள்: கருணை மருத்துவமனை டாக்டர் சுந்தர் தகவல்

இன்றைய அவசர கால உலகில் பலருக்கும் சர்க் கரை நோய் பாதிப்பு இருக்கிறது. சர்க்கரை நோய் பாதிப்பு வந்தவுடன், அதற்கு துணை நோயாக வேறு சில பாதிப்புகளும் ஏற்படுவதால், மருத்துவ செலவுகள் அதிகரிக்கிறது. இந்த நோயை முழுவதும் கட்டுப்படுத்த என்னதான் வழி என்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வாக மதுரை, பீபீகுளம் கருணை மருத்துவமனை டாக்டர் சுந்தர் அளித்துள்ள விபரம் வருமாறு: இந்தியாவில் சர்க்கரை நோய் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பிற்குப் பின் சர்க்கரை நோய் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. காலில் வரும் ஆறாத புண்கள், ரத்த குழாய் அடைப்பு, உருமாறிய உறுப்புகள், காலில் உள்ள உணர்ச்சி நரம்புகள் செயலிழந்து போவது ஆகியவற்றுடன் சதையில் குறைபாடுகளும் ஏற்படுகிறது.

சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண்ணால் பெரு விரலில் மோசமான பாதிப்பு மற்றும் எலும்பும் பாதிக்கப்படும். எலும்பு பாதிப்பு அதிகமாக உள்ளதா என்பதை கண்டறிய எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும். ரத்தக்குழாய் அடைப்பை சி.டி ஸ்கேன், ஆஞ்சியோ, டாப்லர் ஸ்கேன் மூலம் கண்டறியலாம். ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை நோயை, அறுவை சிகிச்சையின்றி மருந்து, மாத்திரை மூலம் எளிதில் சரி செய்யலாம். துர்நாற்றம் வரும் மோசமான புண்கள் வரும் நபர்களுக்கு, அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றலாம். இவ்வாறு கூறினார். மேலும் விபரங்களுக்கு 94438 30249 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் மற்றும் சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனைகளை பெறலாம்.