Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சிறுமியை கடத்தியதாக வாலிபர் மீது புகார்

கிருஷ்ணகிரி, ஏப்.30: கிருஷ்ணகிரி அடுத்த கம்பம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். கடந்த 25ம் தேதி மாலை 5 மணியளவில், வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுபற்றி அவரது பெற்றோர், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த கோபி(32) என்பவர், திருமண ஆசை காட்டி தங்களது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், அவரிடம் இருந்து மகளை மீட்டு தரவேண்டும் எனவும் தெரிவித்து இருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.