Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வெங்காயம், பூண்டு விலை அதிகரிப்பு

போச்சம்பள்ளி, ஆக. 29: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏரிகுளம், குட்டைகள் வறண்டு காணப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் விவசாய பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வடமாநிலங்களில் இருந்து வரத்து குறைவால் வெங்காயம் மற்றும் பூண்டும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ பூண்டு ரூ.250க்கும், சின்னவெங்காயம் ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு பணியாற்றும் பெரும்பாலன தொழிலாளர்கள் வாடகை வீடுகளில் தங்கி குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். சமையலுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.