Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கிருஷ்ணகிரியில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி, ஆக.28: கிருஷ்ணகிரியில் ஆரிய வைஷ்ய சமூகத்தை சேர்ந்தவர்கள் பூணூலை மாற்றி கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. ஆவணி அவிட்ட நாளான நேற்று, ஆரிய வைஷ்ய சமூகத்தை சேர்ந்தவர்கள் பூணூலை மாற்றி கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. ஆவணி அவிட்டம் எனும் சடங்கு, உபநயனம் செய்து கொண்ட பிராமணர், ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடு ஆகும். ஆவணி அவிட்டம், ஆடி மாத அமாவாசைக்கு பிறகு அவிட்டம் நட்சத்திர நாளில் வரக்கூடிய விழாவாகும்.

இதில், காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் தங்களுடைய பழைய பூணூலை எடுத்து விட்டு, புதிய பூணூலை அணிந்து கொள்வர். ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி பழையபேட்டை ராகவேந்திரர் கோயில் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நேற்று காலை 7.30 மணிக்கு நடந்தது. இதில், ஆரிய வைஷ்ய சமூகத்தை சேர்ந்தவர்கள், சிறப்பு பூஜைகள் செய்து, காயத்ரி மந்திரங்களைச் சொல்லி, பழைய பூணூலை எடுத்து விட்டு புதிய பூணூலை அணிந்து கொண்டனர்.