Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி, ஆக.28: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அனுசோனை பகுதியை சேர்ந்தவர் பசப்பா(56), விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தின் அருகே, அதே பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கட்டராமப்பா என்பவரின் நிலம் உள்ளது. இருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், பசப்பா நேற்று முன்தினம் காலை, தனது நிலத்தில் இருந்த மரத்தை வெட்டுவதற்காக சென்றார்.

அப்போது அங்கு வந்த வெங்கட்டராமப்பா, பிரச்னைக்குரிய நிலம் என்பதால் மரத்தை வெட்ட கூடாது என பசப்பாவை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பசப்பாவுக்கு வெங்கட்டராமப்பா கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பசப்பா அளித்த புகாரின் பேரில், சூளகிரி போலீசார் வெங்கட்டராமப்பா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.