Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெட்டிக் கடையில் குட்கா விற்ற முதியவர் கைது

கிருஷ்ணகிரி, ஆக.28: கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் எஸ்எஸ்ஐ மயில்வேல் மற்றும் போலீசார், வெற்றிலை தோட்டம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். அதில், குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கடையின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (72) என்பவரை, போலீசார் கைது செய்தனர். மேலும், கடையில் இருந்து ரூ.200 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.