Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பஸ்சில் கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் கைது

ஓசூர், செப்.26: ஓசூரில் நடத்திய சோதனையில், ஒடிசாவிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சொகுசு பஸ்சில் கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாநில எல்லைப்பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு சென்ற சொகுசு பஸ்சில் சோதனையிட்டனர். அப்போது, ஒரு பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அந்த பஸ்சில் வந்த ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் குபரிகுடா கிராமத்தைச் சேர்ந்த மார்க்கண்ட பைக் மகன் பாலகுருஷ்ண பைக்(26) என்பவர் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், ஒடிசா மாநிலத்திலிருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதனையடுத்து, பாலகுருஷ்ண பைக்கை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.