Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஆக. 26: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், உதவித் தொகையை உடனே உயர்த்தி வழங்கக்கோரி நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெரியசாமி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலம் ரூ.1,500, மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் ரூ.2,000 மாத உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இது அண்டை மாநிலங்களை விட மிகக்குறைவானது. குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில், ரூ.6,000, ரூ.10,000, ரூ.15,000 என மூன்று வகையாகவும், புதுச்சேரியில் ரூ.3,500, ரூ.4,500, ரூ.5,500 என மூன்று வகையாக வழங்குகின்றனர். தெலங்கானாவில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.4,016 வழங்குகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை, போதுமானதாக இல்லை. தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக உதவித்தொகை எதுவும் உயர்த்தப்படவில்லை. உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, கடந்த 3 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் போராடி வருகின்றனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல், போச்சம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு, மாவட்ட துணை தலைவர் கோட்டீஸ்வரன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.