Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தக்காளி விளைச்சல் அமோகம்

ராயக்கோட்டை, ஆக. 26: ராயக்கோட்டை பகுதியில் விளைச்சல் செய்துள்ள தக்காளியை விற்பனைக்கு அனுப்ப பறிப்பதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ராயக்கோட்டை பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கிருந்து தமிழகம், புதுச்சேரி, கேரளாவிற்கு தக்காளியை விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது, 25 கிலோ கொண்ட ஒரு கிரேடு தக்காளி ரூ.500க்கு குறையாமல் விற்பனையாகி வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளியை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். விளைச்சலான தக்காளியை மண்டிகளில் விற்பனை செய்ய, அதிகாலை முதலே தொழிலாளர்களை வைத்து பறிக்கின்றனர்.

காலை 11 மணிக்கு மண்டிகளுக்கு எடுத்து சென்றால், வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். தாமதமாக சென்றால் விலை குறைந்துவிடும் என்பதால், அதிகாலை முதலே பறித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.  நேற்று ஒரு கிரேடு தக்காளி ரூ.500க்கு விற்பனையானது. சில்லறை விலையில், கிலோ ரூ.20க்கு கொள்முதல் செய்தனர். வெளியூர்களில் கிலோ ரூ.50 வரை விற்பனை செய்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.