Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

சூளகிரி அருகே கல்லூரி பஸ் மீது லாரி மோதி டிரைவர் காயம்

ஓசூர், செப்.25: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சப்படி என்ற இடத்தில் வளைவுப் பகுதியில், நேற்று தனியார் கல்லூரி பஸ் ஒன்று திரும்ப முயன்றது. அப்போது, பின்னால் வந்த சரக்கு லாரி, திடீரென பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, எதிர் சாலையிலிருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது.

இதில் தனியார் கல்லூரி பஸ் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி போலீசார், சாலையோர பள்ளத்தில் நின்ற சரக்கு லாரியை கிரேன் மூலம் மீட்டு அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போக்குவரத்து சீரானது.