Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கணவரை பிரிந்து வசித்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தேன்கனிக்கோட்டை, செப்.25: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கச்சுவாடி கிராமத்தில் வசிப்பவர் ராஜா, கூலி தொழிலாளி. இவரது மகள் மாதேவி (27) என்பவரை, கடமகுட்டை கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 5 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக, மாதேவி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

பெற்றோர்கள் கணவருடன் சேர்ந்து வாழுமாறு கூறி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை மாதேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் பசம்மா தேன்கனிக்கோட்டை போலீசில் புகாரளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.