Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தனியார் உரக்கடையில் 21 நாள் விற்பனைக்கு தடை

தேன்கனிக்கோட்டை, செப்.23: தளியில் அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால், 21 நாட்கள் உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தளி பகுதியில் போலி விதைகள், அரசு அனுமதி வழங்காத பூச்சிகொல்லி மருந்துகள் விற்பதாகவும், யூரியா, டிஏபி உரங்களை பதுக்கி கர்நாடகா மாநிலத்திற்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் விவசாயிகள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி தகவல் மற்றும் உரக்கட்டுப்பாடு வேளாண்மை அலுவலர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள், தளி பகுதியில் உள்ள உரக்கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, தளியில் உள்ள தனியார் உரக்கடையில் உரங்களை அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ததும், இருப்பு பட்டியல் சரியாக பராமரிக்காததும், கொள்முதல் பட்டியல் காண்பிக்காததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உரக்கடை உரிமையாளர் உதயமூர்த்தி என்பவருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி, வரும் 11.10.2026 வரை 21 நாட்கள் உரங்களை விற்பனை செய்ய தடை விதித்து

உத்தரவிட்டனர்.