Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது

கிருஷ்ணகிரி, செப்.23: கிருஷ்ணகிரி துளுக்காணி மாரியம்மன் கோயில் அருகே ராசுவீதியை சேர்ந்தவர் சக்திவேல்(35). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த உறவுக்கார பெண்ணான காயத்ரி(29) என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 11 வயதில் பெண், 9 வயதில் ஆண் குழந்தைகள் உள்ளனர். சக்திவேல், அடிக்கடி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை வேலைக்கு செல்லாமல், வீட்டில் இருந்த சக்திவேலிடம், காயத்ரி, இன்றும் வேலைக்கு போகாமல் இருந்தால் எப்படி, வேலைக்கு செல்லாமல், தினமும் சாப்பாடு மட்டும் கேட்டால் எங்கிருந்து வரும் எனக்கேட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த சக்திவேல், காயத்ரியை தாக்கி, அருகிலுள்ள கத்தியை எடுத்து அவரது கையில் குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த காயத்ரி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின்பேர்ல் கிருஷ்ணகிரி டவுன் போலீசார், சக்திவேலை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.