Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது

ஓசூர், அக்.22: உத்தனப்பள்ளி அருகே திறக்க உள்ள சுங்கச் சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கக் கூடாது என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பீர்ஜேப்பள்ளி-உத்தனப்பள்ளி இடையே தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் டோல்கேட் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. அந்த சுங்கச்சாவடி வழியாக மினிலாரி, லாரி போன்ற வாகனங்கள் அடிக்கடி விவசாய பணிக்காக சென்று வருகின்றன.

உத்தனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 45 கிராம மக்கள், அன்றாடத் தேவைகளுக்கு இந்த சுங்கச்சாவடியை கடக்க வேண்டிய சூழல் உள்ளது. நெடுஞ்சாலை அமைக்க, தங்களது வாழ்வாதாரமான விளை நிலங்களை விட்டுக் கொடுத்த தங்களுக்கு, இந்த சுங்கச்சாவடி வழியாக பயணிக்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கையை அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் விடுத்து வருகின்றனர்.

தற்பொழுது சுங்கச்சாவடி மூலம் கட்டணம் பெறப்படும் என்றும், பின் நாட்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் கட்டண நடைமுறை பின்பற்றப்பட்டால், சாலையில் வாகனங்கள் சென்றாலே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்படலாம் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.