கிருஷ்ணகிரி, ஆக. 21: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பையூர் கிராம நிர்வாக அலுவலர் வனிதா மற்றும் அதிகாரிகள், மலைப்பையூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மினி டிப்பர் லாரி கேட்பாரற்று நின்றது. பின்னர், அந்த லாரியில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, அங்குள்ள மண்ணை வெட்டி லாரியில் கடத்த முயன்றது தெரிந்தது.
பின்னர், ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 2 யூனிட் மண்ணுடன் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வனிதா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.



