கிருஷ்ணகிரி, ஆக.21: கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், மண்டல ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளி) காலை 10 மணி அளவில், கேபிஎன் லட்சுமி மஹாலில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். எனவே, மாவட்ட, நகர, கிராம நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தமாகா மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் நகர தலைவர் சத்தியநாராயணன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
+
Advertisement




