ஓசூர், ஆக. 19: ஓசூர் மாநகராட்சி 41வது வார்டு பேஸ்-10 பகுதிக்குட்பட்ட வேல்முருகன் கோயிலில் இருந்து மின்வாரிய அலுவலகம் செல்லும் சாலை வரை ரூ.32 லட்சத்தில் 2 கி.மீ., தொலைவிற்கு தார்சாலை அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக ஓசூர் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் குபேரன்(எ) சங்கர் பங்கேற்று, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர்கள் கிருஷ்ணப்பா, பாண்டுரங்கன், பாபு, அழகப்பன், தேவா, சீனிவாசன், தனபால் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement



