Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ரூ.22 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட நீச்சல் குளம்

ஓசூர், ஆக.19: ஓசூர் அந்திவாடியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக இயங்கி வரும் நீச்சல் குளத்தை, ரூ.22லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதனை ஓசூர் மேயர் சத்யா மற்றும் ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் முகமது ஷபீர் ஆலம் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.தொடர்ந்து, நீச்சல் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

வருங்காலத்தில் மேற்கண்ட நீச்சல் குளத்தில், அனைத்து நீச்சல் வீரர்களும் தொடர்ந்து பயிற்சிபெற்று, தங்களது விளையாட்டு திறனை மேம்படுத்திடவும், மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, சாதனைகள் புரியவும் உதவியாக அமையும். இந்நிகழ்ச்சியில், ஓசூர் சப் கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் சாந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் நடராஜ முருகன், ஓசூர் அந்திவாடி சிறுவிளையாட்டரங்க சிறப்பு அலுவலர் மற்றும் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.