Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

புதிய 4 வழிச்சாலையால் போக்குவரத்து சீரானது

ராயக்கோட்டை, ஆக.14: ராயக்கோட்டையில் அமைக்கப்பட்ட 4 வழிச்சாலையால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. ஓசூர்- தர்மபுரி 4 வழிச்சாலை அமைக்கும் பணி 5 வருடங்களாக நடைபெற்று வந்தன. இப்பணிகள் முடிந்துள்ள நிலையில், இச்சாலையில் வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் வாகனங்கள் 4 வழிச்சாலையில் செல்வதால், ராயக்கோட்டையில் வாகன நெரிசல் குறைந்துள்ளது.

ஓசூரிலிருந்து தர்மபுரியை நோக்கிச் செல்லும் வாகனங்களும், அப்பகுதியிலிருந்து பெங்களூருவை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை, பாலக்கோடு மற்றும் தர்மபுரி நகர்களில் நுழைந்து செல்லாமல் நேராக செல்வதால் நேரம் குறைவதோடு, எரிபொருள் பயன்பாடும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக அமைந்துள்ள 4 வழிச்சாலை அகலமாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.

மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லும் சாலையின் மத்தியில் பச்சைக்கலரில் சென்டர் மீடியன் அமைத்து அதில் வெள்ளை மற்றும் சிகப்பு கலரில் ரேடியம் ஸ்டிக்கர் அமைத்துள்ளது வாகனங்கள் செல்லும் போது பளப்பளக்கிறது. சாலை நேராக அமைந்துள்ளதால் நீண்ட தூரத்தில் செல்லும் மற்றும் வரும் வாகனங்களை காண முடிவதால் இச்சாலை புதுப்பொலிவுடன்

காட்சியளிக்கிறது.