கிருஷ்ணகிரி, நவ.13: சூளகிரி அடுத்த குண்டுக்குறுக்கி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார். பின்னர், மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்களது உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதுகுறித்து, சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
