Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

எம்கேஎஸ் கோபிகிருஷ்ணா பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியேற்பு

காவேரிப்பட்டணம், ஆக.13: காவேரிப்பட்டணம் அருகே தாசம்பட்டி கூட்டுரோடு பகுதியில் செயல்பட்டு வரும் எம்கேஎஸ் கோபிகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியேற்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் மாதன் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் ஜெயசீலன் வரவேற்றார். செயலாளர் ராதிகா புஷ்பக், இணை தலைவர் திவ்யா பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இயக்குனர் புஷ்பக், துணைத்தலைவர் பிரசன்னகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்களாக மருந்து ஆய்வாளர் ராஜீவ்காந்தி, கிருஷ்ணகிரி மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் சேகர், பொருளாளர் ஜெகநாதன், பாலாஜி ராமசாமி, ரமேஷ், கணேஷ்குமார், கோபால் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழியேற்றுக் கொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் மேற்பார்வையில் இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.