கிருஷ்ணகிரி, ஆக.13: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் எஸ்எஸ்ஐ வெங்கடேஷ்பெருமாள் மற்றும் போலீசார் குண்டியல்நத்தம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள செல்வகுமார் என்பவரின் வீட்டின் பின்புறம், சூதாடிக்கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் அத்திமரத்துப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார்(57), சின்னகரகப்பட்டி செந்தில்குமார்(47), கந்திலி கிராமம் இம்ரான் (33), கிருஷ்ணகிரி பழையபேட்டை ஸ்ரீதர்(55), கந்திலி ராமன்(44), திருப்பத்தூர் வள்ளுவர் நகர் சாமிதாஸ்(51), பர்கூர் ஒரப்பம் வைரம்(40), சின்னமூக்கனூர மாணிக்கம்(63), வாணியம்பாடி சுபாஷ்(30), புதுப்பேட்டை சங்கர்(48), கிருஷ்ணகிரி பழையபேட்டை வெங்கடாஜலம்(60) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 11 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.



