போச்சம்பள்ளி, ஆக.12: போச்சம்பள்ளி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் இ- நாம் முறையில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.165க்கும், குறைந்த பட்சமாக ரூ.106க்கும், சராசரியாக ரூ.163க்கும் விற்பனையானது. இதில் 11,820 கிலோ கொப்பரை ரூ.18,41,157க்கு ஏலம் போனது. இதன் மூலம் 188 விவசாயிகள் பயணடைந்தனர்.
இதுகுறித்து போச்சம்பள்ளி ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் அருள்வேந்தனர் கூறுகையில், இங்கு தேசிய மின்னணு வேளாண் சந்தை முறையில் விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஏலத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதனால் விவசாயிகளின் கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்தது. விற்பனை தொகை உடனடியாக, விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. விவசாயிகள் கொப்பரை பருத்தி உள்ளிட்ட பொருட்களை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து கூடுதல் வருவாய் பெறலாம் என்றார்.



