Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஜாமீனில் வந்து வழக்கில்ஆஜராகாத இருவர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, ஆக.12: கிருஷ்ணகிரியில் ஜாமீனில் வந்து வழக்கில் ஆஜராகாத, இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த தண்டேகுப்பத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). இவரை கடந்த 2021ம் ஆண்டு நடந்த திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில், குருபரப்பள்ளி போலீசார் கைது செய்தனர். இதேபோல், சூளகிரி அடுத்த பேரிகையை சேர்ந்தவர் சதீஷ்(30).

இவரை கடந்த, 2021ம் ஆண்டு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் குருபரப்பள்ளி போலீசார் கைது செய்தனர். வழக்கில் சிறைக்கு சென்ற இவர்கள் இருவரும், ஜாமீனில் வெளிவந்த பின்னர் கிருஷ்ணகிரி நீதிமன்ற வழக்கில் ஆஜராகவில்லை. இதையடுத்து, சதீஷ்குமார், சதீஷ் ஆகிய இருவர் மீதும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.