Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

யானை குறுக்கே வந்ததால் டூவீலரில் இருந்து விழுந்து அண்ணன், தம்பி காயம்

தேன்கனிக்கோட்டை, ஆக.12: அஞ்செட்டி அருகே மலை வழிச்சாலையில் சென்றபோது, யானை குறுக்கே வந்ததால் வண்டியிலிருந்து விழுந்து அண்ணன்- தம்பி படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே அனுசோனை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ் (28), பாக்யராஜ் (25). அண்ணன்- தம்பியான இவர்கள் ஒரே டூவீலரில் அஞ்செட்டியில் இருந்து மலைச்சாலையில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, குந்துக்கோட்டை அருகே நடுரோட்டில் யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனைக்கண்டு பயந்து டூவீலரில் இருந்து தடுமாறி கீழே விழுந்த இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.