ஓசூர், டிச.9: ஓசூர் அருகே உள்ள கொத்தூர் பகுதியில் வசித்து வரும் சுமார் 40 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கிடகோரி, 21வது வார்டு கவுன்சிலர் மஞ்சுநாத் தலைமையில் நேற்று ஓசூர் சப் கலெக்டர் ஆக்ருதி சேத்தியிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஓசூர் அருகே உள்ள 21வது வார்டுக்கு உட்பட்ட கொத்தூர் பகுதியில், 40 குடும்பங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீட்டு வரி உள்ளிட்டவைகள் முறையாக செலுத்தி வருகிறோம். எனவே 40க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனர்.
+
Advertisement


