ஊத்தங்கரை, செப்.5: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி எஸ்ஐ மோகன் மற்றும் போலீசார், மேல்சாமல்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள மாந்தோப்பில் பணம் வைத்து, சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் சந்தூர் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி(39), மேல்சாமல்பட்டி முருகேசன்(69) மற்றும் முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கிருந்த நான்கு சேவல்கள் மற்றும் ரூ.8,500 ரொக்கம், 3 டூவீலர்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


