ஓசூர், செப்.5: ஓசூரில் நேற்று விஎச்பி மற்றும் பஜ்ரங்தள் சார்பில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பூரி ஜெகந்நாதர், அவரது தமையன் பாலபத்திரர் மற்றும் தங்கை சுபத்ரா ஆகிய தெய்வங்களின் சிலைகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஊர்வலத்தை விஎச்பி அகில உலக பொதுச்செயலாளர் மிலிந்த் பாரண்டே கொடியசைத்துத் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து அணிவகுத்து சென்றனர்.
நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஊர்வலம் தாலுகா அலுவலக சாலை, எம்ஜி ரோடு, நேதாஜி ரோடு வழியாக காந்தி சிலை பகுதியை சென்றடைந்தது. வழி நெடுகிலும் திருத்தேர் மீது பொதுமக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பளித்தனர். பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் ஆடிய கோலாட்ட நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. ஊர்வலத்தின் நிறைவாக, காந்தி சிலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மிலிந்த் பாரண்டே பெசினார்.


