Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பிஎஸ்வி பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

கிருஷ்ணகிரி, செப்.5: கிருஷ்ணகிரி அருகே மிட்டப்பள்ளியில், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பி.எஸ்.வி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மின்னணு தகவல் தொடர்பு பொறியியல் துறை சார்பில், ஒருநாள் தேசிய கருத்தரங்கு கல்லூரி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிறுவனத்தலைவர் டாக்டர் செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் விவேக் முன்னிலை வகித்தார். துறைத்தலைவர் சீனிவாசன் வரவேற்றார். முதல்வர் டாக்டர் லாரன்ஸ் துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார்.

சிறப்பு விருந்தினராக டெக்னிக்கல் லீட் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். இக்கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வறிக்கையை தேர்ந்தெடுத்து பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உதவிப்பேராசிரியர் ஜான்சிராணி நன்றி கூறினார்.