Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அண்ணா நினைவுநாள் அனுசரிப்பு

ஓசூர், பிப்.4: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அண்ணாவின் 57வது நினைவு தினத்தையொட்டி, மேற்கு மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி நடந்தது. உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் இப்பேரணி நடந்தது. இந்த பேரணி ஓசூர் சப் கலெக்டர் அலுவலகம் முதல் தாலுகா அலுவலகம் உள்ள அண்ணா சிலை வரை சென்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, மாநகர செயலாளரும் மேயருமான சத்யா, அவைத்தலைவர் யுவராஜ், முன்னாள் எம்எல்ஏ முருகன், பொருளாளர் சுகுமாரன், மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், சின்னசாமி, எல்லோரா மணி, மாநில நிர்வாகிகள் சீனிவாசன், மாதேஸ்வரன், விஜயகுமார், அரியப்பன், வெற்றிஞானசேகரன், வீரா ரெட்டி, ஒன்றிய செயலாளர் கஜேந்திர மூர்த்தி, லோகேஷ் ரெட்டி, ராமமூர்த்தி, சின்ராஜ், கருணாகரன், ரகுநாத் பாக்யராஜ், ராஜா, நாகேஷ், பகுதி செயலாளர் துணை மேயர் ஆனந்தய்யா, ராமு, ராஜா, வெங்கடேஷ், நகர நிர்வாகிகள் செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன், சாந்தி, தியாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.