போச்சம்பள்ளி, டிச.3: போச்சம்பள்ளி பகுதியில் பொதுமக்களை கவரும் வகையில், அகல் விளக்குகள் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தாமரை அகல் விளக்கு, துளசிமாட விளக்கு, நட்சத்திர விளக்கு, தேங்காய் விளக்கு உள்ளிட்ட விளக்குகள் ரூ.20 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து போச்சம்பள்ளி மண்பாண்ட வியாபாரிகள் பூங்கொடி வேணுகோபால் கூறுகையில், ‘நாளுக்கு நாள் மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருகிறது. விருத்தாச்சலம் பகுதிகளில் இருந்து அகல் விளக்குகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். கார்த்திகை தீபத்திற்கு ஆண்டுதோறும் பல வண்ணங்களில் அகல்விளக்கு விற்பனை செய்து வரும் நிலையில், இந்தாண்டு வழக்கத்தை காட்டிலும் விலை ஏற்றமாக இருந்தபோதிலும் விலையை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்,’ என்றார்.
+
Advertisement

