ஓசூர், டிச.3: கெலவரப்பள்ளி அணையின் கால்வாய்கள் சீரமைக்கும் பணியை, பிரகாஷ் எம்எல்ஏ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். ஓசூர் ஊராட்சி ஒன்றியம், கெலவரப்பள்ளி அணை கால்வாய்களின் பழுதடைந்த பகுதிகள் நீர்வளத்துறை சார்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாயின் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகள், ரூ.9.70 கோடி மதிப்பில் துவக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்து பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க கோபாலகிருஷ்ணன், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement

