Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

போச்சம்பள்ளி, மார்ச் 3: மத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் நசீம் வரவேற்று பேசினார். வட்டார கல்வி அலுவலர்கள் செல்வராசு, கராமத்துல்லா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம், ஆசிரியர் பயிற்றுனர் சாந்தி மற்றும் ஊர் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் செல்வலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். திவ்யாமகேந்திரன், வக்கீல் சையத் ஏசான் ஆகியோர் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக, சுவர் கடிகாரம் வழங்கினர். மேலும், வணிகர் சங்கம் சார்பில் ரூ.22 ஆயிரம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்களை பள்ளிக்கு வழங்கினர். பள்ளியில் புதிய புரவலராக 20 பேர் தங்களை இணைத்துக் கொண்டனர். முன்னாள் எஸ்.எம்.சி. தலைவர் சசிகலா தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் யோகலட்சுமி நன்றி கூறினார்.