Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டூவீலரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

ஓசூர், அக்.2: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மகாலட்சுமி நகரில், எஸ்ஐ சிவசந்தர் மற்றும் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக டூவீலரில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

இதனையடுத்து அவர்களை சோதனை செய்ததில், 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில், அவர்கள் தேன்கனிக்கோட்டை தாலுகா திம்மனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பூஞ்சோலை (47), ஓசூர் அருகே பேடரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (23) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு வந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.