கிருஷ்ணகிரி, அக்.2: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (2ம் தேதி) அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்படும் என கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, இன்று (2ம் தேதி) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள்,
அனைத்து வகையான மதுக்கூடங்களில், மதுபானங்கள் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்வது, மதுபானங்கள் கொண்டு செல்வது தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981ன் படி முடக்கம் செய்யப்படுகிறது. விதிமுறைகளை மீறி விற்பனை செய்தாலோ, கொண்டு சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


