Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

பஸ்சில் 18 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது

ஓசூர், மே.1: ஓசூர் வழியாக பஸ்சில் கடத்தி வந்த 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மதுரையை சேர்ந்த இருவரை கைது செய்தனர். ஓசூர் அருகே தமிழக மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த தனியார் பஸ்சில் சோதனை நடத்தியதில், மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தை சேர்ந்த விஷால் (19), வசந்தகுமார் (20) ஆகியோர் சாக்கு பையில் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் ஓசூரில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.